Saturday, May 24, 2014

11.Thuymaiyai Virumbu.

   தூய்மையை வெண்மையின் மறுப் பக்கமாகக் கொள்ளலாம்.பளிங்கின் மறுப்

பக்கமாகவும் கொள்ளலாம்.மன வளமையின் இன்னொரு பரிணாமமாகவும்

கொள்ளலாம்.தூய்மையைக் கடைப் பிடிக்க முடியாதவர்களையும்  கூட

தூய்மையான சுற்றுச் சூழல்கள்,அத்தகையவர்களை தூய்மையை கடைப்

பிடிக்கச் செய்யும் உந்து சக்திகளாக செயல்படுகின்றன.


   தூய்மை, அகத்தையும்,புறத்தையும் ஒரு சேர பளீரென பிரகாசப் படுத்தும்

திறமைக் கொண்டது.மனதையும் உடலையும் ஒன்றாக சாந்தப் படுத்தும்

வலிமைக் கொண்டது.சாந்த நிலையில் இருக்கும் அகமும்,புறமும் எவ்வித

சலனங்களுக்கும் இடங்கொடாது.இந்த சலனமற்ற அகத்திற்கும்,புறத்திற்கும்

நேர்மறை எண்ணங்களுடன் நெருங்கிய,நேர்த்தியான,ஆரோக்கியமான

ஒரு தொடர்பு இருக்கும்.அது அவர்களின் பகுத்தறியும் அறிவைப் பலப்படுத்தி

ஆரோக்கியமான,பல  சாதனைகளுக்கு சாத்தியமான பாதையில் இட்டுச்

செல்லும்.


    நல்லது.இந்த நிலையை அடைய  நாம் எந்த வழிமுறைகள பின்பற்றலாம் 

என ஆராய்ந்தால்,சில எளிய வழி முறைகள் இருக்கின்றன.அவைகளை

ஒருமனதாக  நாம் கடைப்பிடித்தோமானால்,எதையும் செம்மையாக செயல்

படுத்தலாம்.


   முதலில் அகத்தை கையாள்வதில் கவனம் கொள்வோம்.நமது அகத்திற்கு 

தனது இலக்கு எது என்பதைத் தெளிவுப்படுத்தலாம் .அந்த இலக்கு

நாம்தான் என்பதை   அதற்கு புரியப்  படுத்தலாம்.நாம் இறைவனின் நேரடிக்

கண்காணிப்பில் செயல் பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று நம் சில பல

தினசரி பழக்க வழக்கங்கள் மூலம் அதற்கு தெரியப்படுத்தப்படுத்தலாம்.


   உதாரணமாக,ஒரு நாளின் ஆறு கால பூஜையை அதற்கு அறிமுகப்

படுத்தலாம்.அது மனதார கசிந்து வழிப்படும் ஒரு நொடி பூஜையாகக் கூட

இருக்கலாம்.கீழ்காணும் முறையில்  வழிப்படலாம்.

1. காலை எழுந்தவுடன்,

2. காலை உணவருந்துமுன்,

3. மதியம் உணவருந்துமுன்,

4. மாலை விளக்கு வைத்ததும்,

5. இரவு உணவருந்துமுன்,

6. இரவு உறங்குமுன்.


   பூஜையின் மகத்துவம்,அதன் முக்கியத்துவம் நம் மனதிற்கு புரிய

ஆரம்பித்ததும்,அதற்கும், இறைவனின்  நேரடி கண்காணிப்பில் இருக்கிறோம்

என்ற எண்ணம் வலுப்படும்.எச்சரிக்கை உணர்வுடன் செயல்படும்.

இறைவனுக்கு இசைவில்லாத எதிர்மறை எண்ணங்களை அண்ட விடாது.

அகம் தூய்மைப் பெறும்.சீரிய பாதைகளுக்கு வழிக் காட்டும்.


    புறத் தூய்மைக்கு, நாம் முதலில் நம்மை பலப்படுத்த வேண்டியது மிகவும்

அவசியமானதொன்றாகும்.அதற்கு நாம் நம்மை ஏதாவது ஒரு பயன் தரும்

செயலில் ஈடுபடுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.இருபது நிமிடங்களுக்கு

ஒரு முறை நமது செயல்பாடுகள் மாறிக் கொண்டே இருக்குமாறு பார்த்துக்

கொண்டோமானால் அலுப்புத் தட்டாது.



   குறிப்பாக.ஒரு நாளில்,நமது இல்லத்தில், ஒரு பத்து நிமிடங்கள் பொதுத்

 தூய்மைக்கும்,ஒரு ஐந்து நிமிடங்கள் நமது இல்லத்தின்  ஏதாவது ஒருக்

குறிப்பிட்டப் பகுதியின்  தூய்மைக்கும் பயன்படுத்தும் நேர்த்தியைக் கற்றுக்

கொண்டால் நமது இல்லமும் என்றும் ஒரே மாதிரியான துய்மையான

நிலையில் காணப்படும். ஒவ்வொரு நாளும் நமக்கு, நாம் ஒரு சமயத்தில்

தொலைத்தப்  புதையல்கள்கிடைத்துக் கொண்டே இருக்கும்.நாள் முழுதும்

உற்சாகமாக செயல்படலாம்.நமது இல்லத்தின் தூய்மை நமக்கு உற்சாகத்தின்

ஊற்றாகும்.நமது தன்னம்பிக்கையும் சீராக மேல் நோக்கி தன் பயணத்தைத்

தொடர்வதால் நமது உடலும்  எந்தவிதமான எதிர்மறை  எண்ணங்களுக்கும்

இடம் தராது.அதன் விளைவாக  எந்தவிதமான எதிர்மறை செயல்களுக்கும்

நம்மிடம் இடமிருக்க வாய்ப்புகள் இல்லை.


    நமது அகமும்,புறமும் என்றும் ஒன்றை ஒன்று சார்ந்து செயல்படுவதால்

அதை இரண்டையும் என்றும் தூய்மையுடன் இருக்குமாறு நாம்  பார்த்துக்

கொண்டோமானால் அதன் செயல்பாடுகளில் எவ்வித ஊறும் ஊனமும்

இருக்க வாய்ப்பில்லை.




  


   


 


No comments:

Post a Comment