Wednesday, May 7, 2014

8.Malarndhirukka Virumbu.( Mugam )

மலர்ந்திருக்க விரும்பு (முகம்)


   மலர்ந்திருக்கும் மலர்களைக் கண்டவுடன்,காணும் மலர்களும் அதாவது

மனிதர்களது முக மலர்களும் இன்னும் விகசித்து, மிக அழகாக,மிகப்

பிரகாசமாக மலரும்.இது இயற்கை.இயற்கையாக மலரும்  முக மலர்கள்

கூட இயற்கையாக மலரும் மலருக்கு ஈடான  அழகானவை.

 
   காலையில் எழுந்தவுடன்,அந்த நாளின் சகல செயல்பாடுகளையும்

இறைவனின் நேரடிக் கண்காணிப்பில் விட்டுவிட்டு மனதை

இலகுவாக்கிக்கொள்ள பழகுதல் சாலச் சிறந்தது.அப்பொழுது மனது

இலேசாகும்.அதற்கு சிந்தித்து செயல்பட வாய்ப்புக்கள் அதிகம்.அது மட்டும்

அல்லாது,நம் மனது நம்பிக்கைக்கும்,மரியாதைக்கும் உரியவர்களின் கீழ்

நாம் பணிப் புரிகிறோம் என்று அதற்கு புரிய வைத்து விட்டால் அது

பயபக்தியுடன்,ஒரு எச்சரிக்கை உணர்வுடன் ஆனந்தமாக செயல்படத்

 துவங்கும்.மனம் மலரும்.மனம் மலர முகம் மலரும்.


   மலர்ந்த முகத்திற்கு மற்ற முகங்களையும் மலர வைக்கும் அபார சக்தி

உண்டு.இல்லத்திலும், உறவினர்கள்,நண்பர்கள் மற்றும் அக்கம் பக்கத்திலும்

அந்த என்றும் இயற்கையாக மலர்ந்திருக்கும் முகத்தின் மேல் ஒரு மரியாதை

பிறக்கும்.நம்பிக்கையை வளர்க்கும்.நெருக்கத்தை ஏற்படுத்தும்.இரு

பக்கத்திலும் நன்மைகள் பல வந்து சேரும்.


  இன்னொருப் புறம் நோக்கின்,மலர்ந்த முகத்தின் முதல் காரணம் முக்கியக்

காரணம் அதன் அகம் பூரணமாக மலர்ந்திருப்பதுதான்.அதன் காரணமாக நம்

உடலின் அகம், புறம் இதன் செயல்பாடுகள் எந்த வித இடர்பாடுகளின்றி

சீராக செயல்படும்.இதன் விளைவாக எந்த விதமான நோய் நொடியும்

நம்மை அண்டாது.நமது உடலும் மனதும் தத்தம் ஆரோக்கியத்தை

பாதுகாத்துக் கொள்ளும்.ஆரோக்கியமான உடலும் மனதுமே நிகரற்ற

செல்வம் என்பதுதான் அனுபவ உண்மை.


   மலர்ந்த முகமும் அதற்கு காரணமான மலர்ந்த மனமும் எந்த விதமான

பிரச்சினைகளையும் இலகுவாக்கி அதற்கான தீர்வுகளையும் எளிதாக

இனம் கண்டுக் கொள்ளும்.இதன் விளைவாக ஒவ்வொரு குடும்பத்திலும்

நிரந்தரமான மகிழ்ச்சி நிலவும்.


   இதனை கண்டு வளரும் நம் குழந்தைகளும் இந்த நல்ல குணத்தைப்

பின்பற்றி,தாங்கள் தங்களால்,தங்களுக்கும், மற்றவர்களுக்கும் எந்த ஒரு

பிரச்சனையும் ஏற்படாமல்,உருவாக வாய்ப்புத் தராமல் வாழக் கற்றுக்

கொள்வர்.


   இதனால் மலர்ந்த முகத்தின் பிரகாசமான பக்கங்களை புரிந்துக் கொண்டு

என்றும் அன்றலர்ந்த மலர்கள் போல வலம் வருவதுச் சால சிறந்தது.


       


   

No comments:

Post a Comment