Thursday, May 15, 2014

9.Kai mel gavanam. Virumbu,

   மனதை ஒருமுகப் படுத்த விருப்பமா? இதோ  மிகவும் எளிதான ஒரு வழி.நம்

கை எந்தப்பணியை செய்ய ஆரம்பிக்கிறதோ அதை கவனத்தில் கொண்டு

அந்தப் பணிமுடியும் வரை அதில் நம் கவனம் இருக்குமாறு நாம், நம்

மனதிற்கு ஒருஅன்புக் கட்டளையிட்டோமானால்,நம் மனது தன் பயிற்சியைத்

தொடங்கி விடும்.இந்த அன்புக் கட்டளையை  மறவாமல்  நாம் ஒரு மூன்று

நாட்களுக்கு நம் மனதிற்கு  தொடர்ந்து நினைவுப் படுத்திக் கொண்டே

இருந்தோமானால் நம் மனதிற்கு அது நன்கு பதிந்து விடும். நான்காவது

நாளிலிருந்து அது தானே தன் பணியில்கவனம் செலுத்த ஆரம்பித்து,

தொடர்ந்து,சிறப்பாக செயலாற்ற ஆரம்பிக்கும்.


    உதாரணத்திற்கு இல்லத்தில்,இல்லத்தரசிகளுக்கு ஐம்பெரும் சக்திகளான 

நிலம்,நீர்,அக்னி,வாயு ஆகாயம் இவைகளின் மேல் தனி கவனம் தேவை.

இல்லத்தை நிர்வகிப்பதில் இந்தஐம்பெரும் சக்திகளின் பங்கு மிகவும்

முக்கியமானது.சிறிது அயர்ந்தால் கூட பெரும் விபத்திற்கு வித்திட்டு விடும்.


    பெரும்பாலான நமது இல்லப் பணிகள் இந்த ஐம்பெரும் சக்திகளை சார்ந்தே

இருக்கின்றன.நமது கைகள் அந்தந்தப் பணிகளைத் துவங்குமுன் நம்

மனதிற்கு,"என் அன்பு மனமே!உன் சகல கவனமும் நாம் இப்போதுத்

துவங்கும் இந்தப் பணியில் இருக்கட்டும்.இந்தப் பணி முடியும் வரை உன்

கவனத்தை சிதற விடாமல் இதை மேற்பார்வையிட்டு,இப்பணி முடிந்ததும்

எனக்கு அதை உடனடியாக நினைவூட்டு". என்று அதற்குப் பதியும்படி அன்புக்

கட்டளையிட்டோமானால்,சரியாக அந்தக் குறிப்பிட்டப்  பணி முடிந்ததும்,நம்

அன்பு மனம், அந்தப் பணி முடிந்ததை தவறாமல் நம் நினைவிற்குக் கொண்டு

வந்து விடும்.


   இதையே நாம் நம் அலுவலகப் பணிகளுக்கும்  நேர்த்தியாகப் பின்பற்றாலாம்.

ஆனால் இதை செயல்படுத்துதல் எளிதாக இருக்க வேண்டுமெனில், நமக்கும்,

நம் மனதிற்குமான பிணைப்பு மிகவும் நேர்த்தியானதாக இருக்க வேண்டும்.

அதை உறுதிப்படுத்திக் கொண்டோமானால்,நமது பொன்னான நேரம்,

உழைப்பு,செல்வம் எல்லாவற்றையும் மிகவும் நேர்த்தியாக சேமிக்க,

செலவழிக்க வாய்ப்புக்கள் அதிகம்.  
         

No comments:

Post a Comment