Friday, May 2, 2014

7.Vaigarai Thuyil eza virumbu.

7.வைகறை துயிலெழ விரும்பு


   கதிரவன் தன் கதிர்கள் பளீரிட விழிக்கும் முன் நாம் விழித்து அவனை எதிர்

கொண்டு வரவேற்றால் அந்த கதிரவனுக்குதான் எத்தனை மகிழ்ச்சி.அதுவும்

சேவலின் மேல் கதிரவனுக்குத் தனிப்  பிரியம்.ஏனென்றால் ஊருக்கு

முன்னால் அந்த அழகான சேவல்தானே அவனை பிரியமுடன்

ஆனந்தமாக வரவேற்க முதல் ஆளாக நிற்கிறது.


    நாமும் சேவலுடன்  சேர்ந்து, அதிகாலையில் எழுந்து அந்த அழகான

கதிரவனை  ஆனந்தமாக வரவேற்க நின்றால்,அவன்தான் எத்தனை

மகிழ்ச்சியுடன்,எத்தனை அழகழகான காட்சிகளை  நமக்கு காண்பித்து

குதூகலிக்கிறான்.அழகான பனித்துளி முதல்  பச்சைப்பசேலென நம்மை சுற்றி

நிற்கும் மரம் செடிக் கொடி வகைகளின்  அசைந்தாடும் அழகையும்,,அந்த

மரங்களில் கூடுக் கட்டிக் குடியிருக்கும் பல வகை  பறவைகள் தத்தம் உற்றார்

உறவினர்களை தத்தம் பல வகை இனிய குரல்களால் எழுப்பி

ஒன்றாக  இரைத் தேடப் புறப்படும் அழகையும்,பலதரப்பட்ட மனிதர்கள்

புத்துணர்ச்சியுடன் தத்தம் பணிகளை கவனிக்க விரையும் அழகையும்,இதுவே

கிராமமாக இருந்தால்,கால்நடைகள், தத்தம் பந்தங்களையயும,அக்கம்

பக்கத்து தமது நண்பர்களையும்,அன்பால் அழைக்கும் ஒலியினையும் நம்மை

காணவைத்து,கேட்க வைத்து நம்மை மகிழ்ச்சியுறச் செய்கிறது.

 
   அதிகாலை வரை அதாவது சூரியன் உதிக்கும் வரை நாம் உறங்கும்

உறக்கம்தான் உண்மையான உறக்கம்.புத்துணர்ச்சித் தரும் ஆரோக்கியமான

உறக்கம்.கண்களிரண்டும் பளீரென்று தெளிந்து விடும்.மூளையும் முழு

ஓய்வுப்  பெற்று,சிந்தனைகள் ஆரோக்கியமானவையாக  இருக்கும்.இதயம்

இதமாக செயல்படும்.நாள் முழுவதும் நம்மை புத்துணர்ச்சியுடன் செயல்பட

வைக்கும்.


   உங்களால் உங்களுக்கும்,உங்கள் மனதிற்கும் ஒரு ஆரோக்கியமான நட்பை

நடைமுறைப் படுத்த முடியுமெனில்,உங்களுக்கு மணியடித்து எழுப்பும்

கடிகாரத்தின் அவசியம் இருக்காது.உங்களது கூர்ந்த மனமே உங்களை நீங்கள்

குறிப்பிடும் நேரத்திற்கு எழுப்பிவிடும்.


   நீங்கள் காலையில் ஒருக்  குறிப்பிட்ட நேரத்தில் எழுந்து உங்களைப் பழக்கப்

படுத்திக் கொண்டால்,இரவிலும் ஒருக் குறிப்பிட்ட  நேரத்தில் உறக்கம்

உங்களைத தழுவிக் கொள்ளும்.ஆழ்ந்த உறக்கம்தான் நம் உடலுக்கும்

மனதிற்கும் போதிய ஓய்வைத் தருவதால்,நம் ஆரோக்கியம் ஒரே சீராக

இருக்கும்.


   மேலும் எண்ணிப் பாருங்கள்.தினமும் காலையில் நாம் எழும் நேரத்திற்கு

 ஒரு அரை மணி நேரம் முன்பாக எழும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால்,

அந்த அதிகப்படியான நேரத்தை கணக்கில் கொண்டால்,ஒரு மாதத்தில் " 15 "

மணி நேரம் நமக்கு அதிக நேரமாக கிட்டும்.அந்தப் பொன்னான நேரத்தை

சரியாக, சாதுரியமாகப்  பயன்படுத்தக் கற்றுக் கொண்டால்,அதனை

செல்வமாக மாற்றிக் கொள்ளுள் வாய்ப்புக்கள் அதிகம்.


  நேரம்.அதை நாம் நேசமாக்கிக் கொள்ள வேண்டும்.அப்பொழுதுதான் அது

வீணாவது தடுக்கப்படும்.நேரத்தின் அருமையை நாம் புரிந்துக் கொள்ள

வேண்டுமெனில்,நாம் இன்னும் ஒரு முக்கியமான நமக்குத் தெரிந்த

உண்மையை நினைவுக் கொள்ள வேண்டும்.அதாவது நேரத்தை கடனாகத்

தரவோ, பெறவோ முடியாது.சேர்த்து வைக்கவும் முடியாது.எனவே

சாதுரியமாக உபயோகிக்கத் தெரிந்தால் மட்டுமே,நம் வாழ்க்கையை

அர்த்தமுள்ளதாக்கி,அதில் சகல செல்வங்களின் உயரத்தையும் கூட்டிக்

கொண்டே செல்ல முடியும்.அதிகாலையில் இரைத் தேடபுறப்பட்டுச்

செல்லும் " முதல் " பறவைக்கே  அதிக இரைக் கிட்டும் என்பது அனுபவ

உண்மை.








    

No comments:

Post a Comment