Saturday, May 17, 2014

10.Uriya Idathil Serkka Virumbu ( Porutgalai )

   நமது அன்றாடப்  பணிகள் எந்தத்  தடைகளும் இல்லாமல் சீராக நடைபெற

வேண்டுமெனில்  நமது அன்றாட செயல்பாட்டில் சிறிது சிரத்தையை

நடைமுறைப் படுத்த முற்பட்டோமானால்,நமது அன்றாட பணியில் எந்த

தேக்கநிலையும் ஏற்பபடாமல்  நமது நேரத்தை நேர்த்தியாக சேமிப்பதுடன் ,

நமது மனநிலையும், உடல் நிலையும்  எந்த குழப்ப நிலைக்கும் உட்படாமல்

சீராக செயல்படும். ஒரு தெளிவான நிலையில் இருக்கும்.


   அதாவது  நமது இல்லத்தில் நம் பயன்பாட்டில் இருக்கும் அனைத்துப்

பொருள்களும் அதற்குரிய இடங்களில் இருக்குமாறு பார்த்துக் கொண்டாலே

மிக அதிக அளவில் விரயமாகும் நமது நேரமும், நம் உடல் நலமும்,மன

நலமும் நல்ல பாதுகாப்பில் இருக்கும்.நமது கவனக் குறைவால்,சில

சமயங்களில் சாதாரண பொருட்களின் இடம் மாறுதல்களே நமது

அசாதாரணமான சொற்களுக்கு வழி வகுக்கும்.அதுவே முக்கியமான

பொருட்கள் எனில், அந்த அசாதரணமான சொற்களின் பிரயோகங்கள்

தொடரும்.எதிர்ப்பார்க்காத எதிர்மறை விளைவுகளுக்கு வழி

வகுக்கும்.இல்லத்தில் அமைதிக்கு பங்கம் ஏற்படும்.


   அதனால் நம் இல்லத்தில் நமது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை

நமது அன்றாட பயன்பாட்டில் இருக்கும் பொருட்களையும்,அவர்களது பள்ளி

சம்பந்தமான பொருட்களையும் அதனதன் இடத்தில் சேர்க்க, சேர்ப்பிக்க

பயற்சிக் கொடுத்து பழக்கப் படுத்தப்பட வேண்டும்.இந்த நல்ல பழக்கத்தை

நாமும் கற்று,நம் குழந்தைகளுக்கும்  கற்றுக் கொடுப்பதன் மூலம் நம்

குழந்தைகள் மேலும் மேலும்  பல நல்ல பழக்க வழக்கங்களைக்  கற்றுக்

கொள்ள வழி ஏற்படுத்தித் தரலாம். 




  

No comments:

Post a Comment