நீராடுதல் சுகம்;சுகமோ சுகம்;
அதிலும்,
நல்லெண்ணெய் ஊறி நீராடல் பரம சுகம்.
அதிலும்,
ஆற அமர நிதானமாய் நீராடல்
நினைவில் நிற்கும் சுகம்.
அதிலும்,
நல்லெண்ணெயுடன், மூத்தோர் சொற்படி
சேர்க்கும் பொருள் சேர்த்து இளஞ்சூட்டில்
அன்பானக் கரங்கள் அங்கம் அங்கமாக,
அழகாக, இதமாக,பதமாக பாசமுடன்,
உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை தேய்த்து வர,
அந்த பரிவின் நினைவில் நீராடல்,
என்றும் மனதில் நிறைந்து நிற்கும் சுகம்.
இந்த இதமான நினைவுகளால் மனம் குளிர,
பதமான எண்ணெய் நீராடலால் உடல் குளிர,
அகமும்,புறமும் அமைதியும்,ஆனந்தமுமாக களிப்புற,
வேறென்ன வேண்டும்?நாளெல்லாம் நலமுடன் ஒளிர?
ஒரு நாள் எண்ணெயை நட்பாக்கி நீராடல் ,
அது வரும் ஒரு வாரம் அகம்,புறம் நலம் காக்கும்;
எனவே வாரந்தவறாது எண்ணெய் முன் வைத்து நீராடல்,
வருடம் முழுதும் நம் அகம்,புறம் ஆரோக்கியத்திற்கு உத்திரவாதம்.

No comments:
Post a Comment