அன்றைய தினம் காந்தி ஜெயந்தி.நமது தேச பிதா மகாத்மா காந்தியின்
மகா உன்னதமான அந்த நாளை,கடவுளின் குழந்தையான அந்த மாமனிதரின்
பிறந்த நாளை நேசத்துடன் கொண்டாட அவரது தேசமே விடியலுடன் சேர்ந்து
விழித்துக் கொண்டது.ஆனால் அந்த குறிப்பிட்ட கிராமத்தின் அந்த குறிப்பிட்ட
வீடு மட்டும் அந்த குறிப்பிட்ட நாளின் உன்னதத்தை புரியாமல் அல்லது
புரிந்தும் புரியாமல் அல்லது புரிந்துதான் என்ன ஆக போகிறது என்ற
விரக்தியில் எப்பொழுதும் போலவே விடியலை எதிர் கொண்டது.
சித்தார்த் நமது தேசத்தின் குடிமகன் மட்டும் அல்ல.அந்த குறிப்பிட்ட
வீட்டின் குடிமகனும் கூட.குடிமகன் என்றால் தன்னை,தன் சூழ்நிலையை
முற்றிலும் மறந்த, துறந்த பெரும் குடிமகன்.அவனது இல்லம் என்றும்
இரண்டு வகையான சூழ்நிலையில்தான் இருக்கும்.காலையில் மயான
அமைதி.மாலையில் மகா கூச்சல்.விதவிதமான கூச்சல்.அவனது
மனைவி இவனுக்கு வாழ்க்கைப்பட வைத்து விட்டாயே என்று தன் விதியை
நொந்து கொள்ளும் கூச்சல்.அவனது தாயார், பெற்ற மனம் பதற கதறி,
நித்தமும்இந்த கொடுமைகளை காண மனதில் சக்தி இல்லாமல்,தன்
வாழ்நாளை வாழும் நாளாக விடாமல் சித்திரவதை செய்யும் மகனை
தெளிவாக்க இறைவனிடம் மன்றாடும் கூச்சல்.இவை எல்லாவற்றையும்
விட கொடுமையிலும் கொடுமையான கூச்சல் அவனது குழந்தைகள்
இரண்டும்,அவனை கண்டாலே பயந்து போய் தங்களது பாட்டியின் மார்பில்
முகம் புதைத்து அலறும் அலறல்.
அன்று காந்தி ஜெயந்தி ஆனதால் சித்தார்த்தின் அலுவலுகதிற்கும்
விடுமுறை.அவனது அனுதினம் குடிக்கும் பானத்திற்கும் கட்டாய
விடுமுறை.இன்றைய தினம் எப்படி பொழுதை கழிப்பது என்று அவனுக்கு
புரியவேயில்லை.வீட்டில் யாரும் அவனுடன் முகம் கொடுத்து பேச தயாராக
இல்லை.குழந்தைகளோ அவன் அருகில் வரவே இல்லை.அவனுக்கு
பரிமாறப்பட்ட காலை உணவை முடித்துக் கொண்டு சட்டையை மாட்டி
கொண்டு வெளியே கிளம்பினான்.
அவன் கிளம்பி செல்வதை அவனது தாயும்,தாரமும் கவனிப்பதை
அவனால் உணர முடிந்தது.அவர்களது பெருமூச்சு அவனது குற்ற
உணர்வில் குத்திட்டு நின்றது.குடிக்கு முன்னால் அவனது தோற்றம்
திரை உலகின் ஒரு பிரபலமான நடிகரை எல்லோருக்கும் நினைவூட்டும்.
குடிக்கு பின்னால் சகலமும் பின்னால் போய் விட்டது.
நான்கு தெரு தாண்டியும்,இலக்கில்லாமல் நடந்து கொண்டே இருந்தான்.
நிமிர்ந்து நடக்க துணிவு வரவில்லை.கால் தன்னிச்சையாய் ஒரு வீட்டின்
முன் நின்றது.ஏறிட்டு பார்வையை உள்ளே செலுத்தினான்.அது ஆறு
மாதத்திற்கு முன்னால் திடீரென மாரடைப்பில் மறைந்து போன தன் மூத்த
சகோதரனின் உயிர் நண்பன் சந்துருவின் வீடு.குடும்பத்தின் மூத்த பிள்ளை,
தன் தந்தை இல்லை என்ற குறை தன் தாய்க்கும்,தன் உடன் பிறந்தோர்
மற்றும் சுற்றங்களும் தெரியா வண்ணம் தன் தந்தையின் இடத்தில்
இருந்து குடும்பத்தை காத்து வந்த உத்தம பிள்ளை.தந்தை இறந்த சில
வருடங்களுக்கு பிறகுதான் சித்தார்த்திற்கும் அவனது இன்னொரு
சகோதரிக்கும் திருமணம் நடந்தது.அதுவும் தந்தையின் இடத்தில்
இருந்த அந்த வீட்டு மூத்தப் பிள்ளையின் பெரு முயற்ச்சியில்.
அதுவும் ஒரே ஆண்டில்.ஊரேஆச்சரியப்பட்டது.மனதார கை கொடுத்தது.
சித்தார்த்திற்கு தனது அன்பு சகோதரனின் திடீர் மறைவிற்கு பிறகுதான்
ஒரு தந்தை ஸ்தானத்தின் அருமையும் பெருமையும் புரிந்தது.அந்த
ஸ்தானத்தை தனது சகோதரன் வகுத்தபோதுதான் தனது சகோதரனின்
அருமையும் பெருமையும் புரிந்தது.தனது தந்தையின் இழப்பை கூட அவனால்
தாங்க முடிந்தது.ஆனால் தனது தமையனின் இழப்பு அவனை இன்னும்
உறங்க விடவில்லை.யாரோ தந்த யோசனை,உறக்கம் வர குடிக்கும்
பழக்கத்திற்கு ஆட்பட்டதால் அது உறக்கதிற்கு பதில் குற்ற உணர்வை
குறையில்லாமல் தந்தது.உடலையும், மனதையும் ஒரு சேர உருக்கியும்
விட்டது.
சந்துரு வெளியில் வந்து சித்தார்த்தின் தோள் மேல் கை வைத்து உள்ளே
அழைத்து சென்றான்.ஒரு நொடி சித்தார்த் தன் தமையனின் அண்மையை
உணர்ந்தான்.உண்மையான,பவித்ரமான அன்பினால் அந்த அன்பை
உணர்த்தவும் முடியும்.அதை உணரவும் முடியும்.
சந்துரு இராணு பணியில் இருக்கிறான்.இப்பொழுது விடுமுறையில்
வந்திருக்கிறான் போலும்.சென்ற விடுமுறையின் போதுதான் தன உயிர்
நண்பனின் விதி முடிந்து போனது.நண்பன் குடும்பத்தார்க்கு அவன்
குடும்பமே பெரிய ஆறுதலாக இருந்தது."உன் நண்பனை நான் அழைத்து
போகிறேன்.அவன் குடும்பத்தார்க்கு ஆறுதலாக இரு". என்று கடவுள்தான்
அவனை அனுப்பி வைத்தார் போலும்.இராணுவத்தில் பணியாற்றிக்
கொண்டிருப்பதாலோ என்னவோ,அத்தனை துக்கத்திலும் தெளிவாக
இருந்தவன் அவன் ஒருவன்தான்.
உள்ளே அழைத்து சென்று அமர வைத்ததும்,சித்தார்த் பித்து பிடித்தது
போல தாரை தாரையாய் கண்ணீர் வடித்தான்.எல்லோர் கண்களும் கசிய
தொடங்கின.உடனே சந்துருவின் தாயார் சிறிது நீர் கொண்டு வந்து அவனை
பருக செய்து சிறிது ஆசுவாசப்படுத்தினார்.
சந்துரு அவனருகில் அமர்ந்து தன் தோள் மீது சாய்த்தான்.சாய தோள்
கிடைத்ததும் சித்தார்த்,விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தான்.சந்துருவின்
குடும்பத்தார்க்கு அவனது வேதனை பெரிய வேதனையாக இருந்தது.சந்துரு
சித்தார்த்தை நிமிர்ந்து அமர செய்தான்."சித்தார்த்! இந்த இளம் வயதில் உன்
அண்ணனின் அருமை பெருமைகளை புரிந்து கொண்டு அவரது நிரந்தர
பிரிவை எண்ணி நீ வேதனைப் படுவது உண்மையிலேயே பெரிய விஷயம்.
அப்படி என்றால் உன் குடும்ப பொறுப்பை உன் அண்ணனிடமிருந்து நீ
ஏற்றுக் கொள்ள நீ தயாராகி விட்டாய் என்று அர்த்தம்".சித்தார்த் ஒன்றும்
புரியாமல் சந்துருவை ஏறிட்டு பார்த்தான்."நீ ஒன்றை புரிந்து கொள்ள
வேண்டும் சித்தார்த்!நீ உனது பெற்றோருக்கு ஐந்தாவது மகனாய் பிறப்பாய்
என்பது பொய்.ஆனால் ஐந்தாவது மகனாய் பிறந்த சித்தார்த் ஒரு நாள்
இறந்து போவாய் என்பது மெய்.மரணம் என்பது ஒரு இயற்கையான ஒரு
நிகழ்வு.அதன் வேதனைதனை காலம் சரிபடுத்தும்.ஆனால் நாம் அதிலேயே
உழன்று கொண்டு இருப்பது நாம் நமது பொறுப்பை தட்டி கழிப்பதற்கு சமம்".
"அதில்லை அண்ணா!குருவி தலை பனங்காயாய் அண்ணாவின்
பொறுப்புக்கள் அதிகமானதால்தான் அந்த சுமையை சுமக்க
இயலாமல்தான் அண்ணாவிற்கு இந்ததிடீர் மறைவு ஏற்பட்டதோ என்று
எனக்குள் பெரிய கலக்கம்"
"சித்தார்த் நீ ஒன்றை மறந்து பேசுகிறாய்.உன் அண்ணா மட்டுமா தனியாக
சுமந்தார்.உண்மையாக சொல்ல போனால் உன் அன்பான அண்ணி மனதார
தோள் தரவில்லை எனில் உன் அண்ணனால் உன் அப்பாவின் பெயரையும்
மரியாதையையும் காப்பாற்றி இருக்க முடியாது.அதை காப்பாற்றி அதற்குள்
தன்னை ஐக்கிய படுத்தி செயலாற்ற உனது அண்ணி உறுதுணையாய்
இருந்ததால்தான், சுற்றத்தாரின் உதவியுடனும் ஊராரின் உதவியுடனும் உன்
அண்ணனால் தன் கடமைகளை சரிவர செய்ய முடிந்தது.உண்மையில் உன்
எண்ணப்படி இருந்தாலும் குருவி தலை பனங்காயாய் இன்னமும் உன்
அண்ணிதான் சுமந்து கொண்டிருக்கிறார்.நமது எல்லோரின் ஒரே கடமை
அவருக்கு பக்க பலமாய் இருப்பதுதான்.தலைச்சன் சம்சாரம் தாய்க்கு சமம்
என்று சொல்வார்கள்.அதற்கு மிக சரியான உதாரணம் சாமி மகளான உனது
அண்ணிதான்.அவர் இனி தனது பிறந்த வீட்டில் இருந்தது போதும்.நான்
இப்பொழுது உனது வீட்டிற்குதான் கிளம்பி கொண்டிருந்தேன்.உன்
தாயுடனும் உனது மனைவியுடனும் கலந்து பேசி ஒரு முடிவெடுப்போம்".
"அதற்கு முன் ஒரு வார்த்தை சித்தார்த்!.நான் உன்னைப் பற்றி
கேள்விபடுவதெல்லாம்எதுவும் சரியாக இல்லை.உன்னை சரியாக்கும்
எண்ணம் உனக்கு நிஜமாகவே இருக்கிறதா?".சித்தார்த் கூனி குறுகிப்
போனான்.சந்துருவின் கையைப் பற்றி கண்களில் ஒற்றிக் கொண்டான்.
தெளிவுப் பெற்றான்.
"

No comments:
Post a Comment