Monday, March 31, 2014

Prayer

எனக்கு வேண்டும் வரங்களை

இசைப்பேன் கேளாய் கணபதி

மனதில் சலனம் இல்லாமல்

மதியில் இருளே தோன்றாமல்

நினைக்கும் பொழுது நின் மோன

நிலை வந்திடனின் செயல் வேண்டும்

கனக்கும் செல்வம் நூறு வயது

இவையும் தர நீ கடவாயே!


   இறை நம்பிக்கை சால  சிறந்தது.அது இல்லை எனில், ஏதோ ஒரு சக்தி  

நம்மை இந்த உலகை சார்ந்து  இயக்குகிறதே அந்த  சக்தியின் மேல் நம்பிக்கை

வைப்பது சாலவும் சிறந்தது.ஏனெனில் ஒரு பரிசுத்தமான,மேம்பட்ட

சக்தியின் மேல் நம்பிக்கை வைத்து நாம் செயல்படும்போது நம்மை அந்த

அற்புதமான சக்தி வழி நடத்துகிறது .


   எனவே இறை நம்பிக்கை உள்ளோர் சார்பில்  நாம் இப்போது

விக்னேஸ்வரனை கும்பிட்டு,"விநாயக பெருமானே!கணபதியே!எனக்கு  

வேண்டிய வரங்களை எல்லாம் உன் புகழ் பாடி வேண்டி கேட்கிறேன்.என்  

மனதில் எதை எண்ணியும் எந்த விதமான சலனமும் அதாவது  எந்த விதமான

ஆசையோ இல்லை வருத்துமோ  இல்லாமல்,எனது புத்தியில் எந்த

விதமான குழப்பமும் இல்லாமல் என்னை சார்ந்து நான் எடுக்கும் முடிவுகள்

தெளிவாக இருக்கவும்,அப்படியும் ஏதாவது குழப்பம் இருந்தால்,அந்த குழப்ப

இருளில் நான் மூழ்கி இருக்க நேரிடினும்,உன்னை மனமுருகி

வேண்டும்போது  உனது அந்த ஸ்திர  நிலை, அந்த மௌன நிலை,அந்த தவ

நிலையை நான் பெற நீ அருள் புரிய வேண்டும்.அதோடு நல்ல வழியில்

வரும் பெரும் செல்வங்களோடு,நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நூறு

வயது வரை வாழும் வரத்தையும் அருள்வாயாக!" என்று நமது முழு முதல்

கடவுள் கணபதியை வேண்டுகிறார்  நமது கவி பாரதியார்.


   பாரதியாரின் இந்த இறை வணக்கம் பாடல் ,ஆழ்ந்த அன்புடன் இறைவனை

வேண்டி,நமக்கு தேவையானவைகளை நல்ல மனதோடு யாசிக்க  வேண்டும்

என்று நம்மை தெளிவாக்குகிறது.             


   

No comments:

Post a Comment